கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020
Share
Advertisement
germany, berlin, corona, restrictions, protest, people, ஜெர்மனி, பெர்லின், கொரோனா, கட்டுப்பாடுகள், எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்

பெர்லின்: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று மேலும் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அங்கு அமலில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை அந்நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள பிரான்ட்பர்க் கேட்டிலிருந்து டியர்கார்டன் பார்க் வரை மக்கள் ஊர்வலமாக சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர். இந்த ஊர்வலத்தில் பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


latest tamil news



ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விஷயங்கள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அந்நாட்டில் இதுவரை 2,10,697 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 9,224 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 1,93,600 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,012 கொரோனாவால் புதிதாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X