தமிழ்நாடு

நடவடிக்கை! பழுதான துணை சுகாதார நிலையத்தினால்... அவசர காலங்களில் விரைந்து செயல்பட

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நடவடிக்கை! பழுதான  துணை சுகாதார நிலையத்தினால்... அவசர காலங்களில் விரைந்து செயல்பட

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லையில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த துணை சுகாதார நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து செயல்படாததால் அவசர காலங்களில் மக்கள் அவதியடைகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லையில் துணை சுகாதார நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சுற்றியுள்ள வெய்யலுார், வெய்யலுார்சாவடி, பரிபூரணநத்தம், ஓடாக்கநல்லுார், வடப்பாக்கம், கூளாப்பாடி, தென்பாதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் சென்றனர். இந்த துணை சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு நேரங்களில் தங்கி அவசர காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர். மக்களின் அவசரத் தேவைகளுக்கு இருந்த துணை சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் வராததால் வாழைக்கொல்லை துணை சுகாதார நிலையம் மூடப்பட்டது. சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சைக்கு சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், சேத்தியாத்தோப்பு பகுதிகளுக்கு செல்கின்றனர்.துணை சுகாதார நிலையத்தை பழுது நீக்கி மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202009:34:30 IST Report Abuse
ராஜ் உலகத்துலயே தரம்வாய்ந்த சுகாதார நிலையம் இது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X