சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேறும் சகதியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கும் இடத்தில் தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சாலையை தரமாக அமைக்காததால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால், தன்னார்வலர்கள், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் மணலை நிரப்பி சரி செய்தனர்.தற்போது பெய்த மழையில் சாலை சேறும் சகதியுமாகி போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையாக மாறியது. இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். விபத்தை தடுக்க தன்னார்வலர்கள் சாலை நடுவே மரக் கட்டையை வைத்தனர்.

இருப்பினும் இரவில் மரக்கட்டையில் தடுக்கி ஓட்டுனர்கள் கீழே விழுகின்றனர். சந்தைக்கு வரும் மக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்தை தடுக்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X