யூ.ஏ.இ.யில் முதல் அணு மின் நிலையம் துவக்கம்

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
துபாய்: எண்ணெய் வளமிக்க யூ.ஏ.இ. தனது முதல் அணு மின் நிலையத்தை துவக்குவதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிட்ட அளவு எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் சூரிய ஆற்றல் உள்ளிட்டவற்றில் மாற்று வழிகளை உருவாக்குவதில் பெருமளவு முதலீடுகளை செய்துவருகிறது. இது குறித்து அந்நாட்டின் சர்வதேச அனுசக்தி அமைப்பின பிரதிநிதி இது

துபாய்: எண்ணெய் வளமிக்க யூ.ஏ.இ. தனது முதல் அணு மின் நிலையத்தை துவக்குவதாக அறிவித்துள்ளது.



latest tamil news



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிட்ட அளவு எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் சூரிய ஆற்றல் உள்ளிட்டவற்றில் மாற்று வழிகளை உருவாக்குவதில் பெருமளவு முதலீடுகளை செய்துவருகிறது.

இது குறித்து அந்நாட்டின் சர்வதேச அனுசக்தி அமைப்பின பிரதிநிதி இது தேசத்திற்கு ஒரு புதிய மலை் கல்லாகும். புதி யவடிவத்தில் தூய்மையான ஆற்றலை தேசத்திற்காக வழங்குவற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் டுவிட்டரில் விரிவான சோதனைகளை மேற்கொள்வதில், மற்றும் வெற்றிகரமாக செயல்பாட்டை முடிப்பதில் பராக்கா வெற்றி பெற்றுள்ளன என பதிவிட்டுள்ளார்.


latest tamil news



பராக்கா அணுமின் நிலையம் கொரியா நாட்டின் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் எமிரேட்ஸ் அணு சக்தி கார்ப்பரேஷனின் (ஈஎன்இசி) துணை நிறுவனமான நவா எரிசக்த நிறுவனம் ஆகியவை இணைந்து சுமார் 24.4 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக சவுதி அரேபியா 16 அணு உலைகளை உருவாக்க திட்ட மிட்டுள்ளதாக கூறியது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

அணு உலை முழுமையாக செயல்பட துவங்கும் போது அதில் உள்ள நான்கு உலைகள் மூலம் சுமார் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவை நாட்டின் மின்சாரத்தேவையில் 25 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. மீதமுள்ள மூன்று அணு உலைகள் விரைவில் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளன.

வளைகுடா நாடுகளை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், கச்சா எண்ணெய் வளத்தை நம்பி இருப்பதை குறைக்கவும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஒரு பிராந்திய தலைவராக வெளிப்படுத்த மேற்கொண்ட உந்துதல் சக்தியின் ஒரு பகுதி இது என கூறினார்.

முதலில் 2017 ல் துவக்க திட்டமிடப்பட்டிருந்த பராகா அணுமின்நிலையம் பல்வேறு தடைகளை சந்தித்தது.மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து வல்லுநர்கள் கவலைகளை எழுப்பி உள்ளனர்.


latest tamil news



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக கடந்த 20 ம்தேதி ஜப்பான் நாட்டில் இருந்து ராக்கெட்டை அனுப்பி உள்ளது.இதன் மூலம் முதலாவது விண்வெளி பயணத்தை துவக்கி உள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட நவடிக்கையாக அணுமின் நிலையத்தை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அணுசக்கதியை உருவாக்க கூடிய உலகின் 30 நாடுகளின்பட்டியலில் இணைய உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருட்டு தி.மு.க - madurai,இந்தியா
03-ஆக-202021:42:18 IST Report Abuse
திருட்டு தி.மு.க துபாயில் ஒரு செபாஸ்டியன் சைமன் , டேனியல் காந்தி போன்றோர்கள் இல்லை என்று நினைக்கிறன்.
Rate this:
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
02-ஆக-202010:07:17 IST Report Abuse
Chockalingam இவர்கள் செய்யும் இந்த அழிவை ஏற்படுத்தும் புதிய விஷயங்களுக்கு எல்லாம் கருணை மிக்க ...வின் அனுமதி உண்டா?
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
02-ஆக-202009:45:27 IST Report Abuse
arudra1951 அந்த அணுக்கழிவுகளை இந்தியாவில் கொட்டவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கேரளாக்காரன் தமிழ் நாட்டுக்கு வந்து மெடிக்கல் கழிவுகளைகளை கூடுவது போல .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X