பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு இணையவழி பயிற்சி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற தலைப்பின் கீழ் இணையவழி பயிற்சி நடந்தது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக, விவசாயிகளால், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி ஆலோசனை பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதையொட்டி, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற தலைப்பில் இணைய தள வழி பயிற்சி நடந்தது. உதவி பேராசிரியர் பாலுமகேந்திரன் வரவேற்றார். வேளாண்மை பல்கலைக் கழக மேலாண்மைக் குழு உறுப்பினர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமணி, ஆடி பட்டத்திற்கு உகந்த பயிர் ரகங்கள் மற்றும் வேளாண் சாகுபடி முறைகள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X