அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதியகல்வி கொள்கை :நாளை முதல்வர் இ.பி.எஸ்., முடிவு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை :புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சுடன், அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் ஒரே தரம்; ஒரே கல்வி என்ற அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கல்வி கொள்கையில், பல்வேறு நிறை, குறைகள் உள்ளதால், பாராட்டுக்களும், விமர்சனங்களும் உள்ளன.சில

சென்னை :புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சுடன், அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடு முழுவதும் ஒரே தரம்; ஒரே கல்வி என்ற அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கல்வி கொள்கையில், பல்வேறு நிறை, குறைகள் உள்ளதால், பாராட்டுக்களும், விமர்சனங்களும் உள்ளன.சில மாநிலங்கள், புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்துள்ளன; சில மாநிலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும், அரசியல் கட்சிகள் மத்தியில், பாராட்டும், எதிர்ப்பும் உள்ளது.இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் மொழி கொள்கை, கலாசாரம், பன்முக தன்மை பாதிக்காத வகையில், எந்தெந்த அம்சங்களை மட்டும், புதிய கல்வி கொள்கையில் ஏற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து, விரிவானஅறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன், செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் ஆன்லைன் கல்வியை அமல்படுத்துவது, தனியார், 'டிவி'க்கள் வாயிலாக, வீடியோ பாடங்கள் நடத்துவது, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்தும், அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.இதையடுத்து, பள்ளி கல்வி துறையின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, முக்கிய முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அன்னே ஸ்டாலின்கிட்ட பேசிட்டு சொல்லுங்க..
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
02-ஆக-202017:24:44 IST Report Abuse
KumariKrishnan Bjp தமிழ் துரோக கழகங்கள் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்கேட்டு ஆராய்ந்து, நேர்மையான பாஜக அரசு அமைச்சரவையில் நிறைவேற்றி இருக்கும் சட்ட மசோதாவில் ஆலோசிப்பதற்கு என்ன இருக்கிறது தாய்மொழி தமிழுக்கு முதல் மரியாதை 5 ம் நிலைவரை தமிழில்தான் கல்வி கற்கவேண்டும் தாய்பாலைப் போல் தமிழை மாணவர்கள் பருகவேண்டும் என்னும் வகையில் புதிய கல்விக்கொள்கையில் துவக்க பள்ளிகளில் தமிழில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டிருக்கும் கருத்தை “தமிழ்” “தமிழ்” என பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் ஏன் இன்னும் ஆதரித்து கருத்து சொல்லவில்லை? இங்கு தமிழ் ஆங்கிலத்திடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது விற்பனை செய்து பணம் வாங்கியவர்கள் தமிழகத்தில் கழக கட்சிக்காரர்களே தமிழை விற்று விட்டார்கள் சொந்த தாயை விலை பேசிவிட்டார்கள் தாலாட்டி வளர்த்த தமிழ் அன்னையை கொலை செய்ய திட்டமிட்டு அவள் கழுத்தை அறுத்து கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் கழக கட்சிகள் பாலூறும் பருவத்திலே கூட அன்னிய மொழியை கற்ப்பித்து தமிழகத்தையே அழித்துவிடும் சூட்சியில் இறங்கிவிட்டது இந்த திராவிட வியாபார கும்பல் இந்த கழகங்கள்தான் தமிழகத்தில் ஆங்கில ஹிந்தி பள்ளிக்கூடங்களை நடத்தி பணம் பார்க்கிறார்கள் தமிழை விற்று பணம் பார்க்கிறார்கள் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்வது நல்லதுதான் என்பதுதான் பாஜக கொள்கை ஆனால் துவக்கமொழி தமிழில் இருந்தால்தான், அது தாய்ப்பால் பருகியதைப்போல துவக்கப்பள்ளி தாய் மொழியில் இருந்தால்தான் அறிவின் அடித்தளம் பலமாக இருக்கும் எனவேதான் துவக்கப்படிப்பு தாய்மொழியில், அதாவது தமிழகத்தில் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்கிறது பாஜக தமிழை மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்த இந்த வேடதாரிகள் இப்போது மவுனம் சாதிப்பது ஏன் என்பதுதான் எமது கேள்வியாகும் தமிழில் தான் துவக்க கல்வி இருக்கவேண்டும் என்னும் புதிய கல்விக்கொள்கையைக் கூட இதுவரையில் ஆதரிக்காத திராவிட கட்சிகள் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்யும் கட்சிகளாகத்தான் காட்சியளிக்கின்றன - குமரிகிருஷ்ணன்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202015:20:55 IST Report Abuse
Sriram V We know he will oppose it, this is the tr followed in TN. They will oppose anything proposed by BJP government. Corrupt mindset
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X