அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தலைவர்கள்படங்களுக்கு மரியாதை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம் : முகையூர் கிழக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் ராஜ் தலைவர் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

முகையூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக தனபால் ராஜ் என்பவரை அ.தி.மு.க., தலைமை நியமித்துள்ளது. இதனையடுத்து கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ., படங்களுக்கு தனபால் ராஜ் மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்குராயநத்தம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.

ஊராட்சி செயலாளர் சிவாலிங்கம், ரகோத்தமன், சரவணன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஒடுவன்குப்பம் சின்ராசு, மேல்வாலை காந்தி, வீரங்கிபுரம் ராமகிருஷ்ணன்,சத்தியகண்டனுார் சிவசங்கரன் மற்றும் மகளிரணி நிர்வாகி கலா உட்பட பலர் பங்கேற்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X