கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் திருநாள் கொண்டாட்டம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

துபாய்; இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை, உலகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, பொது இடங்களில், திரளாக மக்கள் கூட தடை உள்ளது.

இதையடுத்து, முஸ்லிம்கள், முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்றி, குறைந்த எண்ணிக்கையில் தொழுகையில் ஈடுபட்டனர்.ஈகை திருநாள் அன்று, முஸ்லிம்கள், ஆடு மற்றும் ஒட்டக இறைச்சி சமைத்து, அதை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வது வழக்கம்.இந்த முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உணவு வழங்குவது, பெரும் அளவில் தடைபட்டது.

மேலும், உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையும், பக்ரீத் திருநாள் கொண்டாட்டங்களில், கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, முஸ்லிம்கள்மேற்கொள்ளும் ஹஜ் புனித பயணத்தின் கடைசி நாட்கள், ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையுடன் இணைந்து வரும்.

இந்த ஆண்டு, ஹஜ் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உள்ளூரைச் சேர்ந்த, 1,000 பேர், 'ஆன்லைன்' முறையில் தேர்வு செய்து, சகல பாதுகாப்புடன், ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்றினர். இதனால், பக்ரீத் திருநாள் அன்று, மெக்கா வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X