நடுவானில் விமானங்கள் மோதல் எம்.பி., உட்பட ஏழு பேர் பலி| Dinamalar

நடுவானில் விமானங்கள் மோதல் எம்.பி., உட்பட ஏழு பேர் பலி

Added : ஆக 01, 2020
Share
அக்கோரேஜ்; அமெரிக்காவில், இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு எம்.பி., உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின், அலாஸ்கா மாகாணம், அன்கோரேஜ் நகரில், நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. சோல்டோட்னா விமான நிலையம் அருகே, இந்த விபத்து நடந்தது. நொறுங்கிய விமான பாகங்கள் சாலையில் விழுந்ததை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து

அக்கோரேஜ்; அமெரிக்காவில், இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு எம்.பி., உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின், அலாஸ்கா மாகாணம், அன்கோரேஜ் நகரில், நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. சோல்டோட்னா விமான நிலையம் அருகே, இந்த விபத்து நடந்தது. நொறுங்கிய விமான பாகங்கள் சாலையில் விழுந்ததை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், ஆங்காங்கே சிதறிக் கிடந்த ஆறு உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தெற்கு கரோலினாவில் இருந்து, சுற்றுலா தலங்களை காண ஒரு குட்டி விமானம் புறப்பட்டுள்ளது. அதில், விமானியுடன், ஒரு வழிகாட்டி உள்ளிட்ட ஆறு பேர் இருந்துள்ளனர். அலாஸ்கா குடியரசு கட்சி எம்.பி., கேரி நாப், தனியாக ஒரு விமானத்தை ஓட்டி வந்துள்ளார்.

இரு விமானங்களும், நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், கேரி நாப் உட்பட, ஏழு பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.கேரி நாப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர், டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X