கேரள தங்க கடத்தலில் சென்னை புள்ளிகளுக்கும் தொடர்பு?

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (48) | |
Advertisement
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில், 'திடுக்' தகவல்கள் அம்பலமாகி உள்ளன. இவ்வழக்கில் சிக்கியுள்ள, ஸ்வப்னாவுடன், சென்னையைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு தொடர்புஇருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண் அதிகாரி தலைமையிலான, என்.ஐ.ஏ., குழுவினர், சென்னையில் முகாமிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்வப்னா,
கேரள தங்க கடத்தல் ,சென்னை புள்ளிகள் தொடர்பு? NIA, Kerala gold smuggling, smuggling case, Chennai, tamil nadu

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில், 'திடுக்' தகவல்கள் அம்பலமாகி உள்ளன. இவ்வழக்கில் சிக்கியுள்ள, ஸ்வப்னாவுடன், சென்னையைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு தொடர்புஇருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண் அதிகாரி தலைமையிலான, என்.ஐ.ஏ., குழுவினர், சென்னையில் முகாமிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்வப்னா, 34. இவர், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் பிறந்து வளர்ந்தார்; 2013ல், கேரளா திரும்பினார். திருவனந்தபுரத்தில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனஅலுவலகத்தில் பணிபுரிந்தார். பின், கேரளாவில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவல கத்தில், நிர்வாக செயல ராக பணியாற்றினார். இதையடுத்து, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் சேர்ந்தார்.

இந்நிலையில், ஜூலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு, ஒரு, 'பார்சல்' வந்தது. அதில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன.அம்பலம்துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, இந்த தங்கக் கட்டிகள் விவகாரத்தில், ஸ்வப்னா மூளையாக செயல்பட்டது அம்பலமானது.


இது குறித்து, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து, ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளியுமான, துாதரக அதிகாரி சரித் உட்பட, 15 பேரை கைது செய்தனர்.மேலும், இந்த தங்கக் கடத்தல் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, கேரள மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரன், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஸ்வப்னாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, அவருக்கும், சென்னை, திருச்சியில் உள்ள, தங்கக் கடத்தல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.டி.ஆர்.ஐ., என்ற, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இது பற்றி, சென்னை மற்றும் திருச்சியில் விசாரணை நடத்த, என்.ஐ.ஏ.,வின் டி.ஐ.ஜி., வந்தனா தலைமையில், டில்லி மற்றும் பெங்களூரில் இருந்து எட்டு பேர், இரு குழுக்களாக நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.முதற்கட்டமாக, 2019 ஜனவரியில், மிகப்பெரிய தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய, முக்கிய புள்ளிகள் குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் டி.ஆர்.ஐ., அதிகாரிகளிடம், பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.அப்போது, சென்னை, சூளைமேட்டில், முக்கிய புள்ளி ஒருவரின் வீட்டில், 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரித்தனர்.இந்த தங்கம், துபாயில் இருந்து விமானத்திலும், இலங்கையில் இருந்து படகு வாயிலாகவும், சென்னைக்கு கடத்தி வரப்பட்டதாக, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், ஹாங்காங்கில் இருந்து, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 20 கிலோ தங்கத்துடன், சென்னையில் வெளிநாட்டு பெண்கள் இருவர் சிக்கியது குறித்தும் விசாரணை நடந்தது.


ஆவணங்கள் சேகரிப்புசென்னை விமான நிலையத்தில், கொரியாவைச் சேர்ந்த, இளம்பெண்கள் இருவரிடம், 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பற்றியும், மற்றொரு கடத்தலில், 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது குறித்தும் விசாரித்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஆவணங்களை சேகரித்தனர்.அதன் அடிப்படையில், தங்கக் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, சென்னை வழியாக தங்கம் கடத்திய விவகாரத்தில், ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பது பற்றி, திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அது பற்றி, ஸ்வப்னாவுடன் விசாரிக்க, ஒரு குழுவினர், நேற்று விமானத்தில் கேரளா சென்றனர். மற்றொரு குழுவினர் சென்னையில் முகாமிட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல, திருச்சி விமான நிலையம் வழியாக, 2019 ஜூலையில், மிகப்பெரிய அளவில் தங்கக் கடத்தல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது பற்றி, டி.ஆர்.ஐ., அதிகாரிகள், அப்போது, 15 நாட்கள் விமான நிலையத்தில் முகாமிட்டு, விசாரணை நடத்தினர். அதனால், இதிலும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருக்கலாம் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே, திருச்சி சென்று விசாரிக்க இருப்பதாக, என்.ஐ.ஏ., அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anvar - Singapore,இந்தியா
03-ஆக-202013:52:52 IST Report Abuse
Anvar உலகநாயகன் ஒரு நேர்காணல் வைக்கலாம்
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அப்படியே இந்த மொள்ளமாரிங்களுக்கு ஜாமீன் கிடைக்க வழிசெய்த நல்லவர்களையும் விசரனை வலையல்த்தில் வைத்து பாத்ரூமில் வழுக்கிவழ செய்யவும்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
02-ஆக-202021:26:38 IST Report Abuse
Tamilan இவையனைத்தும் இன்று நேற்று உருவானதல்ல . ஆயிரம் காலத்து பயிர்கள் . ஆழமாக காலூன்றியுள்ள ஆல மரங்கள். தோண்ட தோண்ட பல பூகம்பங்கள் கிளம்பலாம். வெட்ட வெட்ட பலவிழுதுகள் முளைக்கலாம் . இந்த ஜென்மத்தில் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது . இதற்கெல்லாம் முக்கிய காரணம் , உலகமெல்லாம் பணம் சம்பாதிக்க செல்பவர்கள் என்றிருந்த காலம் போய் , உலகமுழுவதும் இப்போது மிக பெரிய தொழில் செய்ய முனைபவர்கள் , தொழில் செய்பவர்கள் தான் மிக முக்கிய காரணம் . நாடுகடந்து பத்தாயிரக்கணக்கான கோடிகள் , லச்சக்கணக்கான கோடிகள் சம்பாதிக்கும் கொள்ளையடிக்கும் அம்பானி , சிவநாடார் போன்றோரும் மிக பெரிய காரணம் . மொத்தத்தில் அழிவது மக்கள் , சமுதாயம் , நாடு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X