அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அ.தி.மு.க., ஒன்றியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மூன்று ஒன்றிய செயலாளர்களும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருக்கோவிலுார் ஒன்றியம், அ.தி.மு.க.,வின் நிர்வாக வசதிக்காக மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏற்கனவே இருந்த பழனி தொடர்ந்து பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய ஒன்றிய செயலாளராக தேவியகரம் சேகர், மேற்கு ஒன்றிய செயலாளராக சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர செயலாளராக சுப்பு தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக உமாசங்கர், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர்கள் பாலாஜி, சக்திவேல், மாவட்ட ஜெ., பேரவை துணைத் தலைவர் பூபேஷ், துணைச் செயலாளராக சுபாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் வெங்கடேசன், ஜெ., பேரவை இணைச் செயலாளராக எடையூர் பழனி, மாவட்ட இணைச் செயலாளராக சேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதிய ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், நகர செயலாளர் சுப்பு ஆகியோருடன் அ.தி.மு.க., வினர் ஐந்துமுனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று நான்குமுனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் ஜெயபால், கரடி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சம்பத், நகர துணைச் செயலாளர் ராணி, நகர பொருளாளர் ஷபி, பேரவை நகர செயலாளர் சுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் வெற்றி, அசோக், பொ.மெய்யூர் கூட்டுறவு வங்கி தலைவர் செந்தாமரை தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X