பாக்., துப்பாக்கிச்சூடு ராணுவ வீரர் பலி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ஜம்மு; ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்ட எல்லைப் பகுதியில், நேற்று, பாக்., ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நம் ராணுவ வீரர் ஒருவர், வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில், அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவம் தரப்பில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு, நம் ராணுவ வீரர்களும், தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, பாக்., தரப்பில், நம் ராணுவத்தினர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ரோஹின் குமார், 25, வீரமரணம் அடைந்தார். ஹிமாச்சல பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த, இந்த வீரரின் திருமணம், நவ., மாதம் நடைபெற இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

'அவரது கடமை, வீரம், தியாகத்திற்கு, நாடு என்றும் கடன் பட்டுள்ளதுடன், அவரது இறுதி சடங்குகள், உரிய அரசு மரியாதையுடன் நடத்தப்படும்' என, ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X