பொது செய்தி

இந்தியா

1.94 கோடி பேரிடம் பரிசோதனை 10.94 லட்சம் பேர் மீண்டுள்ளனர்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

புதுடில்லி; நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய, நேற்று வரை, 1.94 கோடி பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து, 10.94 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின், நேற்றைய அறிக்கை:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய, நாடு முழுதும், தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று வரை, 1.94 கோடி பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில், 5.26 லட்சம் பேருக்கு நடந்த பரிசோதனையில், 57 ஆயிரத்து, 118 பேரிடம், வைரஸ் தொற்று உறுதியானது. நேற்றுடன், தொடர்ந்து மூன்றாவது நாளாக, 50 ஆயிரத்திற்கு மேல், தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 16 லட்சத்து, 95 ஆயிரத்து, 988 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 10.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தொற்றின் மீட்பு விகிதம், 64.53 சதவீதமாக உள்ளதுடன், இறப்பு விகிதம் 2.15 சதவீதம் குறைந்துள்ளது

.நாட்டில், நேற்று, மஹா.,வில், 265 பேர், தமிழகத்தில், 97; கர்நாடகாவில், 84; ஆந்திராவில், 68; மே.வங்கத்தில், 45; உ.பி.,யில், 43; டில்லியில், 27; குஜராத்தில், 23 பேர் உள்ளிட்ட, 764 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை, 36 ஆயிரத்து, 511 ஆக அதிகரித்துள்ளது.இதில், மஹா.,வில், 14 ஆயிரத்து, 994 பேரும், டில்லியில், 3,963; தமிழகத்தில், 3,935; குஜராத்தில், 2,441; கர்நாடகாவில், 2,314; உ.பி.,யில், 1,630; மே.வங்கத்தில், 1,581 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X