பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கேரள போலீசில் முதல் 'கொரோனா' பலி

கோட்டயம்: கேரளாவின் இடுக்கியில், போலீஸ் எஸ்.ஐ., அஜிதன், 55, கொரோனா வைரஸ் பாதிப்பால், கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். இம்மாநில காவல்துறையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது தான். இவரது மனைவி, மகன் ஆகியோரும், வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

36 போலீசார் டில்லியில், 'சஸ்பெண்ட்'

புதுடில்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, டில்லியின் வடமேற்கு மாவட்ட போலீசார், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பணிக்கு வர உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், 36 போலீசார், பணி நேரத்தை தவறவிட்டு, காலை, 6:30 மணிக்கு பணிக்கு வந்தனர். இதனால், 36 பேரும் அடுத்த உத்தரவு வரும் வரை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜ., - எம்.எல்.ஏ., உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: கேரளாவில், தங்க கடத்தல் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி, மாநிலத்தின் ஒரே பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜகோபால், திருவனந்தபுரத்தில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதை, பா.ஜ., தேசிய பொதுச் செயலர், பூபேந்திர யாதவ், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மாநில பா.ஜ., சார்பில், பேரணி நடைபெற உள்ளது.

நடிகரின் தங்கைபிரதமரிடம் கோரிக்கை

மும்பை: மஹா.,வின் மும்பையில், தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுஉள்ளார். அதில், 'நாங்கள், மிக எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் சகோதரரின் மரணம் குறித்த வழக்கை, முறையாக விசாரித்து, எங்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' எனக் கூறி உள்ளார். நடிகரின் தற்கொலையில், ஹிந்தி நடிகை ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக, பாட்னா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கையை, மும்பைக்கு மாற்றக்கோரி, ரியா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் ஆக., 5ம் தேதி விசாரிக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X