கோர்ட் அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி; 'கோர்ட் அவமதிப்பு சட்டம், பேச்சு சுதந்திரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்திருந்தார். 'கடந்த, ஆறு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதில், உச்ச நீதிமன்றத்துக்கும் பங்கு உள்ளது' என, அதில் அவர் தெரிவித்திருந்தார்

.இதையடுத்து, பிரசாந்த் பூஷனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்நிலையில், பிரசாந்த் பூஷன், மூத்த பத்திரிகையாளர், என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு, நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

பேச்சு சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் போன்றவை, தவறான நடவடிக்கை என்பது போல, அதில் கூறப்பட்டுள்ளது.பேச்சு சுதந்திரத்தையும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்துள்ளது. ஆனால், அதை மீறும் வகையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு உள்ளது; இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்துக்கே எதிராக உள்ளது. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, வரும், 4ல் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஆக-202011:52:53 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN யார்செய்தாலும் குற்றம் குற்றமே தவறு தவறே என கொள்வதே சரியான தீர்வு. நீதி அரசரும் ஓர்மனித பிறவியே மகானோ கடவுளோ அல்லவே அல்ல எல்லோரும் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். தன் கருத்தை கூற எல்லா இந்திய குடிமகனுக்கும் உண்டு.. அக்கருத்தை நாகரிகமான வார்த்தைகளால் தான்கூற வேண்டும் என்பது விதி....அதுஅவமதித்தல்ஆகாது. நிதியை நிதி அமைச்சரே கொள்ளை அடித்தால் திருடினால் திருடன்தானே அவனை கொள்ளைக்காரன் என்றால் தவறா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X