பொது செய்தி

இந்தியா

ராணுவ 'வெப் சீரியல்'களுக்கு இனி தடையில்லா சான்று தேவை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

புதுடில்லி; இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சி அமைப்புகள் உள்ள திரைப்படங்கள், 'வெப் சீரியல்'களுக்கு, ராணுவ அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.

பாலாஜி டெலிபிலிம் நிறுவனம், 'டிரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு' என்ற, 'டிவி' தொடரின் முதல் பாகத்தை, 2018 செப்., 27ல் ஒளிபரப்பியது. இதையடுத்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இதில், இந்திய ராணுவத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, தயாரிப்பாளர், ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என, 'பிக்பாஸ்' புகழ், ஹிந்துஸ்தானி பாபு, சமீபத்தில் போலீசில் புகார் செய்தார்.

அதுபோல, 'ஜீ 5' சேனலில் ஒளிபரப்பாகும், 'கோட் எம்' என்ற தொடரிலும், ராணுவத்தின் தரத்தை குறைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, ராணுவ அமைச்சகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, ராணுவ அமைச்சகம், இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், 'இந்திய ராணுவம் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வெப் தொடர்களுக்கு, தயாரிப்பாளர்கள், ராணுவ அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 'இந்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு, திரைப்படங்களை தணிக்கை செய்வதற்குத் தான் சட்ட அங்கீகாரம் உள்ளது. இணையம் வாயிலாக ஒளிபரப்பாகும் தொடர்களை தணிக்கை செய்யும் அதிகாரம் இல்லை. அதனால், ராணுவ அமைச்சகத்தின் உத்தரவை, வெப் தொடர்களுக்கு அமல்படுத்த முடியாது.

அதற்கென சட்டம் இயற்ற வேண்டும்' என, தணிக்கை துறை அதிகாரி ஒருவர் கூறினார்.'ஓ.டி.டி.,' எனப்படும் இணையம் வாயிலாக ஒளிபரப்பாகும் தொடர்கள் படு மோசமாக, குடும்பத்துடன் பார்க்க முடியாத வகையில் உள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியுஷ் கோயல் சமீபத்தில் வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X