பஞ்சாபில் விஷ சாராய பலி 86 ஆனது தலா, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சண்டிகர்; பஞ்சாபில், விஷ சாராயம் குடித்ததால் பலியானோர் எண்ணிக்கை, 86 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்., அரசுபஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தின், அமிர்தசரஸ், படாலா மற்றும் டர்ன் டரன் மாவட்டங்களில், விஷ சாராயம் குடித்ததால் பலியானோர் எண்ணிக்கை, 86 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வழக்கில், இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாநிலத்தில், நேற்று முன்தினம் வரை, விஷ சாராயம் குடித்ததால், 21 பேர் பலியாகி இருந்தனர்.இந்நிலையில், டர்ன் டரன் மாவட்டத்தில், பலியானோர் எண்ணிக்கை நேற்று, 63 ஆக உயர்ந்துள்ளது.அமிர்தசரசில், 12 பேரும், குர்தாஸ்பூரில், 11 பேரும் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை, நேற்று மாலை, 86 ஆக உயர்ந்தது. மேலும், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலால்துறையைச் சேர்ந்த, ஏழு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.மேலும், டி.எஸ்.பி., இருவர் உட்பட ஆறு போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என்றும், முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

போராட்டம்

இதற்கிடையே, பலியான கிர்பால் சிங் என்பவரது குடும்பத்தினர், அவரது உடலை ஏற்க மறுத்து, விஷ சாராய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரினர்.தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, அமிர்தசரஸ் - டில்லி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்துவதாக கூறினர்.இதையடுத்து, அவர்களுடன், எம்.பி.,யான ஜஸ்பீர் சிங் திம்பாவும், எம்.எல்.ஏ., சுக்விந்தர் சிங் டேனியும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், இறந்தவர்கள் குடும்பத்திற்கு, தலா, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X