சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 பேரை தாக்கிய வழக்கில் 4 வாலிபர்கள் கைது

Added : ஆக 01, 2020
Share
Advertisement

விழுப்புரம் : ஆரோவில் அருகே குடிப்பதை தட்டிக் கேட்ட மூவரைத் தாக்கிய வழக்கில் நான்கு பேரைபோலீசார் கைது செய்தனர்.

ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தைச் சேர்ந்த பலராமன் மகன் விக்னேஷ், 25; சங்கர் மகன் ஜோதிமாறன், 21; புதுச்சேரி முருகன் மகன் பிரவீன்குமார், 22; சேகர் மகன் மணிகண்டன், 22; ஆகியோர் கோட்டக்கரை பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மது குடிக்கவந்தனர்.அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அன்பழகன், 38; அவரது நண்பர்கள் ஆறுமுகம், அய்யப்பன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் உட்பட நால்வரும், அன்பழகன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி அவர்களது பைக்கை சேதப்படுத்தினர்.இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஷ் உட்பட நால்வரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X