அ.தி.மு.க., வெற்றிக்கு சிவகங்கையை பிரிக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வெற்றிக்கு சிவகங்கையை பிரிக்க திட்டம்

Added : ஆக 01, 2020
Share
சிவகங்கை:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.,வை வடக்கு, தெற்கு என இரு மாவட்டமாக பிரிக்க தலைமை திட்டமிட்டுஉள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.வரும் 2021 சட்டசபை தேர்தலில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்,கட்சி தலைமை 12 ஒன்றியங்களை தலா 3 ஆக பிரித்து 36 ஒன்றிய செயலாளர்களை

சிவகங்கை:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.,வை வடக்கு, தெற்கு என இரு மாவட்டமாக பிரிக்க தலைமை திட்டமிட்டுஉள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வரும் 2021 சட்டசபை தேர்தலில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்,கட்சி தலைமை 12 ஒன்றியங்களை தலா 3 ஆக பிரித்து 36 ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ளது.கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை ஒன்றிய செயலாளர்களை எளிதில் சந்தித்து கட்சி பணியாற்ற முடியும். ஒன்றிய செயலாளர் பதவி அறிவிப்பால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

தற்போது திண்டுக்கல்உட்பட சில மாவட்டங்களை அ.தி.மு.க., கட்சிரீதியாக பிரித்துள்ளது. அதேபோன்று சிவகங்கையை வடக்கு, தெற்கு மாவட்டமாக பிரிக்க திட்டமிட்டுள்ளது.பல தேர்தலில் அ.தி.மு.க., கோட்டையாக மானாமதுரை மட்டுமே உள்ளது. சிவகங்கையில் காங்., கம்யூ., கட்சிகளும், கடந்த தேர்தலில் மட்டுமேஅ.தி.மு.க., வென்றுஉள்ளது.

திருப்புத்துாரில் தி.மு.க.,வும், காரைக்குடியை காங்.,-ம் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றன. 2021 தேர்தலில் 4 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெற மாவட்டத்தை பிரித்து 4 தொகுதி களையும் கைப்பற்ற அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளுக்குள் போட்டியும் நிலவுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X