பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்:ராமநாதபுரம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ஆலய பராமரிப்பு பணிக்கு நிதியுதவி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சொந்தக் கட்டடத்தில்இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்கள் பராமரிப்பு, பழுதுபார்த்தல் பணிக்குஅரசு நிதியுதவி வழங்குகிறது. பத்து ஆண்டுக்கு மேலாகசொந்தக்கட்டடத்தில் இயங்க வேண்டும். பதிவுத்துறையில் பதிவு செய்தும், வெளிநாட்டிலிருந்து எந்த நிதியும் பெறவில்லை என சான்றிளிக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள்www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்துமாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

பராமரிப்பில்லாத அளிந்திக்கோட்டை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அளிந்திக் கோட்டை செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.ரோட்டை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்த ஊதியம்: பணியாளர்கள் கவலை

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சியிலும் நான்கு துாய்மை பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். கிராமங்களில் வீடு, வீடாக சென்று குப்பையை சேகரித்து மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்டவேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 70 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கடலாடி ஒன்றிய கூட்டம்

கடலாடி: கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக்கூட்டம் நடந்தது. தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆத்தி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பாண்டி (கிராம ஊராட்சி) கமிஷனர் அன்புக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் முனியசாமி பாண்டியன் வரவேற்றார். மக்கள் எங்களிடம் சொல்லும் குறைகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.முறையாக நிதி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 24 ஒன்றியக்கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை தலைவரிடம் வழங்கினர்.திட்டப்பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

படு மோசமான முத்துப்பட்டினம் ரோடு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி விலக்கில் இருந்து எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டினம் செல்லும் ரோட்டால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் அடைகின்றன. இந்த ரோடு சீரமைப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X