பொது செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' கிடைப்பதில் சிரமம் 'டயாலிசிஸ்' நோயாளிகள் தவிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு, ஐந்தாவது மாதமாக தொடர்கிறது. இதனால், பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், இ - பாஸ் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆரம்பத்தில், விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து செல்கிறாரோ, அந்த மாவட்ட நிர்வாகம் நேரடியாக, இ - பாஸ் வழங்கி வந்தது.அப்போது, நோயாளிகளின் நிலை, சிகிச்சை முறை ஆகியவற்றை கவனித்து, சென்று வர பாஸ் வழங்கி வந்தனர். சிறுநீரக பிரச்னைக்கு, டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்கள், கர்ப்ப கால சோதனை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு, பெரும்பாலும், தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை தேவைப்படும்.

அவர்களுக்கு, நீண்ட காலத்திற்கு, பல முறை சென்று வருவதற்கான, இ - பாஸ்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலை வந்தது.இதில், நோயாளிகள் எந்த மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமோ, அந்த மாவட்ட கலெக்டர் அனுமதித்தால் தான், பாஸ் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால், தொடர் சிகிச்சைக்கு செல்ல வேண்டியவர்களுக்கு பாஸ் கிடைப்பதில்லை. ஒரு முறை விண்ணப்பித்தால், ஒரு நாள் மட்டுமே சென்று வர முடியும். தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகள், இதனால் சிரமம் அடைகின்றனர். முக்கியமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்கள், உடல் உறுப்பு தரும் உறவினர், சான்றிதழ்கள் என, அடிக்கடி அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வரவேண்டியுள்ளது.

அவர்களுக்கு, இ - பாஸ் கிடைக்காததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 'இதுபோன்ற நோயாளிகளுக்கு, உடனடியாக, இ - பாஸ் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X