பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொள்ளுகாரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன் குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளி மாணவன் அபிஷேக் பாரத் 600க்கு 583 மதிப்பெண் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்தார். மாணவன் ஜெயசூர்யா 564 மதிப்பெண்களுடன் பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். மாணவி பவித்ரா 561 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

580 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவரும் 580 மதிப்பெண்கள் ஒருவரும் , 550 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 124 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 139 பேரும் எடுத்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் நடராஜன், பள்ளி முதல்வரும் லிலி ரோஸ் அறக் கட்டளை குழுத் தலைவருமான திருமாவளவன், செயலர் சக்கரவர்த்தி, பொருளாளர் ராஜா, இயக்குனர்கள் ஜனார்த்தனன், மணிவாசகம், சுப்பிரமணியன், கண்ணன், சாரங்கபாணி, ராஜேந்திரன், திருவேங்கடம், சரோஜா, செல்வராஜ் சண்முகம், நிர்வாக அலுவலர் கலைவாணன் ஆகியோர் பாராட்டி கேக் வெட்டி கொண்டாடினர். ஆசிரியை, ஆசிரியர்கள், ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X