பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை பரப்பும் மையங்களான வங்கிகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை; தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க, வங்கிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபோதிலும், சில வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது, சக ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், திருச்சி கிளை ஒன்றில், 43 பணியாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. விசாரணையில், துணை பொது மேலாளர் ஒருவர் மூலம் பரவியது தெரிந்தது. தொற்று கண்டறியப்பட்ட இரண்டாவது நாளில், அவர் இறந்தார்.

வங்கிக்கு சென்று வந்த வாடிக்கையாளர்கள் குறித்து, கணக்கெடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், இரு வங்கிகளில் கொரோனா பரவியது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு வங்கிகளும் பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் பல வங்கிகளில், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது.வங்கி ஊழியர்கள் சிலர் கூறியதாவது:கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அரசு கூறுகிறது. வங்கி ஊழியர்களுக்கு, அந்த வாய்ப்பு கொடுக்காமல் பணிக்கு வரச் சொல்கின்றனர். அறிகுறி உள்ளது என சக ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கின்றனர். திருச்சியில், துணை பொது மேலாளரை வலுக்கட்டாயமாக பணிக்கு வரச் செய்தனர். ஒரு கட்டத்தில், அவரால் பணி செய்ய முடியாமல், மருத்துவமனைக்கு சென்றார். இரண்டு மணி நேரத்தில் இறந்து போனார்.

நிலக்கோட்டை வங்கி காசாளருக்கு தொற்று அறிகுறி ஏற்பட்டும், மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தப்பட்டார். அந்த நாட்களில், சிலருக்கு, அவர் தொற்றை பரப்பினார்.வாடிக்கையாளர்கள் நலன் மீது அக்கறை காட்டும் வங்கி நிர்வாகங்கள், ஊழியர்களை கண்டுகொள்வதில்லை. 'டார்கெட்' எனக் கூறி, ஊழியர்கள் உயிருடன் விளையாடுகின்றனர்.எனவே, எல்லா ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X