சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 ஒட்டகம், 42 பசு 50 எருது பறிமுதல்

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வேலுார்; இறைச்சிக்காக அடைத்து வைத்திருந்த இரண்டு ஒட்டகங்கள், 42 பசுக்கள், 50 எருதுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலுார் மாவட்டம், ஊசூர் அடுத்த பூதுாரில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில், இறைச்சிக்காக ஒட்டகம், பசுக்கள் அனுமதியின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அணைக்கட்டு தாசில்தார் முரளிகுமார் தலைமையில், வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரித்தனர்.

இதில், அனுமதியின்றி இறைச்சிக்காக இரண்டு ஒட்டகங்கள், 42 பசுக்கள், 50 எருதுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.அடைத்து வைத்திருந்தவர்கள், நாங்கள் இறைச்சிக்கு வாங்கவில்லை. வளர்க்க வைத்திருப்பதாக வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு, விலங்குகளை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-ஆக-202020:03:13 IST Report Abuse
RaajaRaja Cholan ஒரு மதத்தவர் மற்றோரு மதத்தவரை குறை கூறாமல் புறணி கூறாமல் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தால் நாடு எவ்வளவு நன்றாக இருக்கும். அது நடக்குமா. இது எந்த அரசியல் வாதியின் கையிலும் இல்லை , தனிப்பட்ட மணித மனதில் இருந்து தோன்ற வேண்டும், தோன்றும். அணைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் சந்தோஷமாக பிற நாடுகள் பொறாமை படும் அளவு சிறப்பாக , சகிப்புத்தன்மையுடன் வாழ வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X