2 ஒட்டகம், 42 பசு 50 எருது பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 ஒட்டகம், 42 பசு 50 எருது பறிமுதல்

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share

வேலுார்; இறைச்சிக்காக அடைத்து வைத்திருந்த இரண்டு ஒட்டகங்கள், 42 பசுக்கள், 50 எருதுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலுார் மாவட்டம், ஊசூர் அடுத்த பூதுாரில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில், இறைச்சிக்காக ஒட்டகம், பசுக்கள் அனுமதியின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அணைக்கட்டு தாசில்தார் முரளிகுமார் தலைமையில், வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரித்தனர்.

இதில், அனுமதியின்றி இறைச்சிக்காக இரண்டு ஒட்டகங்கள், 42 பசுக்கள், 50 எருதுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.அடைத்து வைத்திருந்தவர்கள், நாங்கள் இறைச்சிக்கு வாங்கவில்லை. வளர்க்க வைத்திருப்பதாக வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு, விலங்குகளை ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X