தமிழ்நாடு

யாருக்காக... இது யாருக்காக! மண்டல உதவி கமிஷனர்களுக்கு அதிகார பகிர்வு

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 01, 2020
Share
Advertisement
 யாருக்காக... இது யாருக்காக! மண்டல உதவி கமிஷனர்களுக்கு அதிகார பகிர்வு

கோவை:அலைச்சலின்றி, 'ஆன்-லைன்' முறையில், கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான நடைமுறையை செயல்படுத்த, வரைவாளர்கள் மன்றாடி வரும் நிலையில், கோவையில், 2,000 சதுரடிக்குள் அனுமதி பெற, மண்டல உதவி கமிஷனர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இது, முறைகேடு செய்வதற்கே வழியேற்படுத்தும் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை நகர் பகுதியில், 7,000 சதுரடி வரை வீடு கட்டுவதற்கும், 2,000 சதுரடி வரை, வணிக பயன்பாட்டுக்கும், மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் வரைபட அனுமதி பெற வேண்டும். இதற்கு, ஆன்லைன் வாயிலாக, வரைபட அனுமதி வழங்க மையம் அமைத்திருந்தாலும், இந்நடைமுறை முழுமையாக பின்பற்றப்படுவதில்லை.
பாதி நடவடிக்கை, 'ஆன்-லைன்' முறையிலும், பாதி நடவடிக்கை, கோப்பு வடிவிலும் கையாளப்படுகிறது.முழுவதும் ஆன்லைன் அனுமதிவரைபட அனுமதி பெற, விண்ணப்பதாரர், மாநகராட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. லஞ்சம் கொடுக்காமல், அனுமதி கிடைப்பதில்லை. இம்முறையை ஒழிக்க, அலைச்சல் இன்றி, 'ஆன்-லைன்' முறையில், அனுமதி வழங்க, கட்டட வரைவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு மாறாக, மண்டல அளவில், 2,000 சதுரடி பரப்பளவு வரையிலான கட்டடங்களுக்கு, அந்தந்த உதவி கமிஷனர்களே அனுமதி வழங்க, கமிஷனர் ஷ்ரவன்குமார், அதிகார பகிர்வு அளித்து, உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கமிஷனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'நிர்வாக நலன் கருதி, 2,000 சதுரடி பரப்பளவு வரையிலான கட்டுமானங்களுக்கு, கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்க, சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்களுக்கு, அதிகார பகிர்வு அளிக்கப்படுகிறது.
'விண்ணப்பம் பதிவு, கட்டணம் செலுத்துதல், குறிப்பு பெறுதல், இறுதி உத்தரவு வழங்குதல் ஆகிய பணிகளை, உதவி நகரமைப்பு அலுவலர்கள் கண்காணித்து, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனுமதியற்ற/ அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாகவும், மண்டல அலுவலகங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கலாம்' என, தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கட்டட வரைவாளர்கள் கூறியதாவது:ஒருவர், 1,200 சதுரடிக்குள் கட்டுமான பணி மேற்கொள்ள, கள ஆய்வின்றி, 'ஆன்-லைன்' முறையில் அனுமதி அளிக்க வேண்டும் என்பது, தமிழக அரசின் உத்தரவு. திருப்பூர், மதுரை மாநகராட்சிகளில் செயல்படுத்தும்போது, கோவையில் நடைமுறைப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் மறுக்கிறது.
மண்டல அளவிலான அதிகார பகிர்வு, பழைய நடைமுறை. மீண்டும் பின்னோக்கிச் செல்லும் முயற்சி. தற்போதைய காலத்துக்கு பொருந்தாது. முறைகேடு, தவறு நடக்கவே வாய்ப்பு அதிகம். தவறான பாதையை நோக்கி, மாநகராட்சி செல்கிறது. தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி, 'ஆன்-லைன்' முறையில், அனுமதி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X