அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தனியார் மருத்துவமனைகளுக்கு  சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

புதுக்கோட்டை; ''கொரோனா சிகிச்சைக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரியில், 25 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தில், 300 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு துவக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று இங்கு ஆய்வு நடத்தினார்.பின், அவர் கூறியதாவது:அரசு உத்தரவை மீறி, சென்னையில், கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.அதேபோல், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில், கொரோனா பாதிப்பு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் மற்றும் ஐ.சி.எம்.ஆர்., விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழக அரசு, ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறது.தமிழகம் முழுதும், கொரோனா சிகிச்சை சிறப்பு மையங்களை, தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளையும் உயர்த்தி வருகிறது.தமிழகத்தில், 26 லட்சத்து, 58 ஆயிரத்து, 150 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ௧.80 லட்சம் பேர் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-ஆக-202009:23:13 IST Report Abuse
RajanRajan மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கையா. எத்தினி தபா இப்படி சொல்லியே மக்களை ஏமாத்துவீங்களோ அம்மாவழி மவராசனுங்களா. உங்க எச்சரிக்கைகளை தூக்கி குப்பையிலே போட. போயி அதிகபடியா வசூலிச்ச பணத்தை நோயாளிகளிடம் திருப்பி கொடுக்க வைக்கிற வழிய பார்ப்பீங்களா அதை விட்டு விட்டு எச்சரிக்கையாம் பெரிய எச்சரிக்கை. குரானா பில் என்றால் லட்ச்சம் கோடிகள் தான் ஏம்பா இது குரானாவை விட கொடியதா தெரியல்லே. இதுக்கு பேசாம வுட்டிலே இருந்து சொத்து போய்டலாம். இப்படி அடாவடித்தனம் பண்ணும் மருத்துவமனை அந்த டாக்டர்களை தொழில் பண்ண தடை அங்கீகாரம் ரத்து விதிச்சு சட்டம் போடுங்கப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X