என் - 95 மாஸ்க் விற்பனையில் டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'என் - 95 மாஸ்க்' விற்பனையில் டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி

Added : ஆக 01, 2020
Share
மதுரை; டாக்டரிடம், 'என் - 95' மாஸ்க் விற்பனை செய்வதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் சந்திரமோகன், 41. இவர், தன் மருத்துவமனைக்கு, 5 லட்சம், 'என் - 95 மாஸ்க்' கேட்டு, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, 'த்ரீ எம் பிவி' என்ற நிறுவனத்தை அணுகினார். இணையதளம் வழியாக ஒப்பந்தம் போடப்பட்டு,

மதுரை; டாக்டரிடம், 'என் - 95' மாஸ்க் விற்பனை செய்வதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் சந்திரமோகன், 41. இவர், தன் மருத்துவமனைக்கு, 5 லட்சம், 'என் - 95 மாஸ்க்' கேட்டு, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, 'த்ரீ எம் பிவி' என்ற நிறுவனத்தை அணுகினார். இணையதளம் வழியாக ஒப்பந்தம் போடப்பட்டு, முன்பணமாக, 2.25 கோடி ரூபாய் அனுப்பினார்.

மாஸ்க் அனுப்பாமல், அந்நிறுவனம் மோசடி செய்தது. சந்திரமோகன் புகாரில், அந்நிறுவனம் மற்றும் விற்பனை பிரிவு பேட்ரிக் வேன்டிக், மேலாளர் பீட்டர்பாத் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல், கிர்கிஸ்தான் நாட்டின் நிறுவனம் ஒன்றும், 2 லட்சம் மாஸ்க் வழங்குவதாக கூறி, டாக்டர் சந்திரமோகனிடம், 90.65 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததற்குரிய வரி செலுத்தப்பட்டதா என, டாக்டர் சந்திரமோகனின் வருமான வரி தாக்கல் விபரங்களை, வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X