கறவை மாடுகளுக்கு அம்மை: கால்நடை வளர்ப்போர் பீதி

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 கறவை மாடுகளுக்கு அம்மை: கால்நடை வளர்ப்போர் பீதி

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் கறவை மாடுகளுக்கு வேகமாக அம்மை நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் பீதியடைந்துள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் பெத்தானேந்தல்,செல்லப்பனேந்தல், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம்கறவை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடுகளுக்கு சில நாட்களாக அம்மை நோய் பரவி வருகிறது. நோய் பாதித்த மாடுகளின் உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. உணவு உண்ண முடியாமல் நாக்கை வெளியே தொங்க போட்டு கொண்டே உள்ளன.

உணவு உண்ண முடியாததால் பால் கறக்கும்திறனும் பாதிக்கப்பட்டுஉள்ளது. கன்றுகள் பால் குடிக்கும் போது அவைகளுக்கும் நோய் பாதிக்கும் என்பதால் அவற்றையும் அனுமதிப்பது இல்லை .மாடுகளை 15 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தி மஞ்சள், வேப்பிலை அரைத்து கொப்புளங்கள் மீது தடவி வரவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அல்லிநகரம் நாராயணன்கூறுகையில் நோய் பாதித்த மாடுகளை கால்நடைமருத்துவர்கள் தினசரிவந்து கண்காணிக்கின்றனர். எந்தவித மருந்துகளாலும் குணப்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக பால் கறக்காவிட்டால் மாடுகள் கறவை திறனை இழக்க வாய்ப்புண்டு, இதுவரை இந்த நோய் மாடுகளுக்கு வந்ததே இல்லை. முதன் முறையாக திருப்புவனம் வட்டாரத்தில் பரவி வருவதால் இழப்பை சந்தித்து வருகிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X