பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரகோசமங்கையில் துவங்கியது உழவுப்பணி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை,களரி, சீத்தை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல், மிளகாய் பயிரிட டிராக்டர் மூலம் மண்ணை கிளறி வருகின்றனர்.

விவசாயி மங்களநாதன் கூறுகையில், ஆவணிக்குள் விவசாய நிலங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். புரட்டாசி முதல் வாரத்தில் விதைப்பதற்கு தயார் செய்து கொள்வோம். கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. தற்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஆனால் மழை பெய்யவில்லை. நிலத்தின் ஈரப்பதத்தை முன்னிறுத்தியே உழவு செய்வதற்கு விவசாயிகள் தயாராகுகின்றனர்.முன்பு ஏர்பூட்டி நிலத்தை உழுதோம். உழவுமாடுகள் குறைவாக உள்ளதால் தற்போது டிராக்டரை பயன்படுத்தி உழுகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X