பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1ல் தவறிய மாணவர்களே... பிளஸ் 2ல் வெற்றி 'வெயிட்டிங்!'

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:பிளஸ் 1 பொதுத்தேர்வில், தோல்வியை தழுவிய மாணவர்களின் விபரங்கள் திரட்டி, அவர்களை தேர்ச்சி பெற செய்வதற்கு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், 357 பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். இவர்களுக்கு நேற்று ரிசல்ட் வெளியிடப்பட்டது. மாநில அளவில் கோவை முன்னிலை வகித்தது. ஆனால், பாடவாரியாக, 650 மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.இவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், கல்லுாரி படிப்பை போல, 'அரியராக' கருதி, பிளஸ் 2 படிப்பை தொடரலாம். அரியர் தேர்வை, உடனடி பொதுத்தேர்வு அல்லது, மார்ச் மாதம் நடக்கும் பொதுத்தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவது அவசியம். பிளஸ் 2 முடிப்பதற்குள், அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால், பள்ளிக்கல்வி நிறைவு செய்ததாக கருதப்படமாட்டாது.இதனால், பள்ளி வாரியாக தோல்வியை தழுவிய மாணவர்களின் பட்டியல் தயாரிக்கவும், இம்மாணவர்களை தற்போது இருந்தே, தயார்ப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்போது, பிளஸ் 2 சிலபஸ் கையாளப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்துக்கான சிலபஸ், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதோடு, சில பாடப்பிரிவுகளுக்கு, வீடியோ கன்டென்ட், வரும் 3ம் தேதி முதல், லேப்டாப்பில் பதிவேற்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தோல்வியை தழுவிய மாணவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படும். விரைவில் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தவும், மாணவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.-உஷா,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X