சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வக்கீல் மீது தாக்குதல்: 8 போலீசார் மீது வழக்கு

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 வக்கீல் மீது தாக்குதல்: 8 போலீசார் மீது வழக்கு

திருநெல்வேலி; போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில், டி.எஸ்பி., இன்ஸ்பெக்டர் உட்பட, எட்டு போலீசார் மீது, 11 பிரிவுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் அருகே மாறன்குளத்தை சேர்ந்தவர், வக்கீல் செம்மணி, 46. இவர், 2017 ஆகஸ்டில், யாக்கோபுபுரத்தை சேர்ந்த ஐசக்செல்வகுமார் மீது, பழவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்குப் பதிவு செய்யவும், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், கோர்ட் பரிந்துரைத்தது.தாக்குதல்இதனால், ஆத்திரமுற்ற இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், 2017 நவ., 4 நள்ளிரவில், வக்கீல் செம்மணி வீட்டிற்கு சென்று, அவரை தாக்கினார். நள்ளிரவு, ௧:00 மணிக்கு உவரி போலீஸ் ஸ்டேஷன்அழைத்து சென்று மீண்டும் தாக்கினார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி செம்மணியின் தங்கை, மறுநாள் வள்ளியூர் கோர்ட்டில் மனு செய்தார்.

கோர்ட், ஐந்து வக்கீல்கள் குழுவை உவரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விசாரித்தது. இதையடுத்து, செம்மணி காயங்களுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தென் மாவட்ட வக்கீல்கள், திருநெல்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, வள்ளியூர், டி.எஸ்.பி., சுகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மற்றவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதையடுத்து, வள்ளியூர், டி.எஸ்.பி., சுகுமார், பழவூர் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், எஸ்.ஐ.,க்கள் விமல்குமார், பழனி, முகமது, போலீசார் சாகர், செல்லத்துரை, ஜோஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, செம்மணி, 2018 ஜனவரி, 23ல் திருநெல்வேலி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய, கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செம்மணி, கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, சேரன்மகாதேவி சப் - கலெக்டர் ஆகாஷ், விசாரணை நடத்தி, போலீசார் அத்துமீறி நடந்தது குறித்து, கலெக்டருக்கு அறிக்கை அளித்தார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த துாத்துக்குடி வந்த, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., சங்கரிடம் வக்கீல் செம்மணி புகார் அளித்தார்.

அதன்பின்னும், வழக்குப்பதிவு செய்யவில்லை. வழக்கு பதிவு செய்யாவிட்டால், ஆக., ௩ல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என, வக்கீல்கள் தெரிவித்திருந்தனர்.11 பிரிவுகளில் வழக்குஇதையடுத்து, திருநெல்வேலி, சி.பி.சி.ஐ.டி., ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார், டி.எஸ்.பி., சுகுமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட, எட்டு போலீசார் மீது, ஜாமினில் வர முடியாத பிரிவு உட்பட, 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
02-ஆக-202012:09:58 IST Report Abuse
Ramachandran Rajagopal இந்த நாட்டில் காவல் துறை உண்மை வழக்குகளை பதிவு செய்வதில்லை. உண்மை வழக்குகளை பதிவு செய்தால் குற்றச்சாட்டு தயாரிக்க அரசு குற்றஞ் சாட்டுனருக்கு லஞ்சம் தர வேண்டும் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து நடத்த லஞ்சம் தர வேண்டும். எனவே யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்காக பொய் வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை பெரும் வகையில் பொய் சாட்சிகள் சொல்ல வைக்கிறார்கள். குற்றவியல் நடுவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு காவல் துறையினர் சொல்லும் விதத்தில் வழக்கினை நடத்தி தீர்ப்பு வழங்குகின்றனர்.வழக்கறிஞ்சர்களுக்கு பணம் கிடைப்பதால் தட்டிக் கேட்பது இல்லை.அவர்களுக்கென ஒன்று வரும்போது மட்டும் கூடி போராட்டம் நடத்துகின்றனர்.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202002:58:17 IST Report Abuse
.Dr.A.Joseph இந்த வழக்கறிஞர் ஏழை எளியவர்களுக்கு ஜாதி மத பேதமின்றி உதவுபவர். பணம் இல்லை என்றால் கூட வாங்க மாட்டார். எளிமையாக அறமுடன் வாழ முயல்பவர். ஒரு சில நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X