சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் ரூ.5 கோடி மோசடி எஸ்.பி., ஆபீசில் குவியும் புகார்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்; தஞ்சையில், வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்த பணம், நுாதன முறையில் மோசடி செய்யப்பட்டது குறித்து, எஸ்.பி., யிடம் பலரும் புகார் அளித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள, தேசிய வங்கிகளின் பல கிளைகளில், வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து, 5 கோடி ரூபாய்க்கு மேல் நுாதன முறையில் எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் அச்சம்இந்த சம்பவம், தஞ்சை மாவட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில், பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், வங்கிக்கு சென்று புகார் அளித்தும், எந்த பலனும் இல்லாததால், எஸ்.பி., அலுவலகத்தில், சிலர் மட்டுமே புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியான பின், தஞ்சாவூர், எஸ்.பி., அலுவலகத்தில், வாடிக்கையாளர்கள் பலரும், புகார் அளித்து வருகின்றனர்.நடந்தது எப்படி?ஓய்வு பெற்ற குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'குளோனிங் டெக்னாலஜி'யை பயன்படுத்தி, போலி ஏ.டி.எம்., கார்டை உருவாக்கி, பணத்தை திருட வாய்ப்புள்ளது. தஞ்சையில் பாதிக்கப்பட்டவர்கள், ஏ.டி.எம்., கார்டு விபரங்களை யாரிடமும் சொல்லவில்லை, என்கின்றனர்.ஏ.டி.எம்., இயந்திரத்தில், 'ஸ்கிம்மர்' என்ற கருவியை பயன்படுத்தி, பணம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம், அதில் பொருத்தப்படும் ஒரிஜினல் கார்டின் விபரங்களை பதிவு செய்து, போலி கார்டு தயாரித்து, பணத்தை மோசடி செய்து விடுவர்.எஸ்.பி.ஐ., போன்ற வங்கிகளில், மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., வந்தால் தான், பணம் எடுக்க முடியும். புகார் அளித்த பலரது கணக்கில், இரவு நேரங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், ஓ.டி.பி., இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. இது புது வகையான தொழில் நுட்பமாக தெரிகிறது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளது. தற்போது தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X