மின் கம்பத்தால் ஆபத்து

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருப்பூர், பி.என்., ரோடு சரவணா வீதியில் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏதாவது நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணி, லட்சுமி நகர்.குடிநீர் வரவில்லைதிருப்பூர், வேலம்பாளையம், ஜவஹர் நகரில், 15 நாட்களாகியும் குடிநீர் இன்னும் வரவில்லை. மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.- ஜனகராஜ், வேலம்பாளையம்.தாழ்வாக செல்லும் ஒயர்திருப்பூர், காலேஜ் ரோட்டில் பல இடங்களில் மின்கம்பம் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.- கணேஷ், ராயபுரம்.போக்குவரத்து இடையூறுதிருப்பூர் மாநகராட்சி சந்திப்பு ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விக்ரம், தென்னம்பாளையம்.வீணாகும் குடிநீர்1. திருப்பூர், வளையங்காடு ரோட்டில் சில இடங்களில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.- சம்பத், குமார் நகர்.2. சுல்தான்பேட்டை, ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன் குழாய் உடைந்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது. உடைந்துள்ள குழாயை மாற்றியமைக்க வேண்டும்.-ரத்தினம், சுல்தான்பேட்டை.சாலையை சீரமைக்கலாமே!திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் எதிரில் சாலையில் பெரிய குழி உள்ளது. வளைவில் திரும்பும் வாகனங்கள் தடுமாறுகின்றன. குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.-மரகதம், தாராபுரம் ரோடு.சிக்னலால் பழுதுதிருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் பஸ் ஸ்டாப், சிக்னல் நால்ரோடு சந்திப்பில் பழுதாகியுள்ளது. நேரத்தை சரிவர காட்டாததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். விபத்து அபாயம் உள்ளது.-கார்த்திகேயன், குமார்நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X