சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றால் இறந்தவர் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 தொற்றால் இறந்தவர் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

பெரம்பலுார்; கொரோனாவால் இறந்தவர் உடலை, உறவினர்கள் அம்போ என விட்டுச் சென்றதால், சுகாதாரத் துறையினரே அடக்கம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், இடைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 70. அரியலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம், 28ம் தேதி, அரியலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பலனின்றி, 30ம் தேதி மதியம் ஜெயபால் இறந்தார்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. 31ம் தேதி மாலை, அரியலுாருக்கு வந்த உறவினர்கள், கொரோனா பாதிப்பால் ஜெயபால் இறந்த தகவலை அறிந்ததும், உடலை வாங்காமல், புறப்பட்டு சென்று விட்டனர்.சுகாதாரத் துறையினர்தொடர்பு கொண்ட போது, அவர்களுடைய மொபைல் போன்கள், 'ஆப்' செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, சுகாதாரத் துறையினரே, பாதுகாப்பு உடை அணிந்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஜெயபால் உடலை அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X