பொது செய்தி

தமிழ்நாடு

தரமான விதை விதைத்தால் அளவு, செலவு குறைவு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஆடிப்பட்டத்தில், தரமான விதைகளை விதைத்தால், அளவும், செலவும் குறையும்.திருப்பூர் மாவட்டத்தில், ஆடிப்பட்ட விதைப்பு தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் இப்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, விதை பரிசோதனைத்துறையினர் கூறியதாவது:விதைத்தர நிர்ணயம், ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை பயன்படுத்தினால், தேவையான விதைகளை மட்டும் விதைத்தால் போதும். செலவும் குறையும்.வழங்கமாக ஆடிப்பட்டத்தில் (ஜூலை, ஆக.,), மக் காச்சோளத்தில், கோ 6, பேபிகார்ன் கோ(பி.சி.,) 1, சோளத்தில் கோ(எஸ்)28, கோ 30, பி.எஸ்.ஆர்., 1, பையூர் 2, கம்புப்பயிரில் கோ 7, கோ(சி.யு.,) 9 போன்ற ரகங்களைத் தேர்வு செய்யலாம்.விதை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள் விதைக்கும் முன், முளைப்புத்திறனைப் பரிசோதித்து, தரத்தில் தேர்ச்சி பெற்ற விதைகளை விதைப்பதன் மூலம், குறைந்த விதையில் பயிர் எண்ணிக்கையைப் பெருக்கி, நிறைந்த மகசூலைப் பெற முடியும்.விதை பரிசோதனை நிலையங்களில், ஒரு விதை மாதிரிக்கு 30 ரூபாய் என்ற கட்டணத்தில், விதையின் புறத்துாய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம், பிற ரக கலப்பு போன்றவை பரிசோதிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X