சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை

--துாத்துக்குடி; சாத்தான்குளத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று, பெனிக்ஸ் நண்பர்கள், வக்கீல் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.துாத்துக்குடி, சாத்தான்குளத்தில், ஜெயராஜ், 6௦; மகன் பெனிக்ஸ், 31, ஆகியோர் போலீசார் தாக்கியதில் இறந்த வழக்கில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், உள்ளிட்ட 10 போலீசார் கைதாகி, மதுரை சிறையில் உள்ளனர்.சி.பி.ஐ. கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில் விசாரணை நடக்கிறது. நேற்று அவர் தலைமையில், மூன்று பேர் சாத்தான்குளம் வந்தனர். மாலை, 3:00 மணிக்கு, சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடை அருகே உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்திற்கு சென்றனர்.சம்பவத்தன்று, இரவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பெனிக்ஸ் உடன் உதவிக்காக சென்ற நண்பர்கள் நால்வர், வக்கீல்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். மாலை, 5:00 மணி வரை விசாரணை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X