பொது செய்தி

தமிழ்நாடு

ஆழ்கடலில் வசிக்கும் அரிய வகை கடல் டிராகன்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

வாலிநோக்கம்:மன்னார் வளைகுடா கடலில்ஆயிரக்கணக்கான அரிய மீனினங்கள் உள்ளன. பார்ப்பதற்கு டிராகன் போன்று காணப் படுகிறது.

கடல் இலை

டிராகனின் விலங்கியல் பெயர் பைகோட்யூரஸ் ஈக்வஸ் என்பதாகும். பாறைகள், கடலின் தரைப்பகுதியில் உள்ள கடற்பாசி, கடற்புற்வெளிகளில் வசிக்கும்.பார்ப்பதற்கு நீர்தாவரத்தைபோலவே இருப்பதால், எதிரிகளால் இவற்றை அடையாளம்காண்பது சிரமம். கூர்மையான நீண்ட முட்கள் தற்காப்பிற்குபயன்படுகிறது.

டிராகன் மீனின் இரு கண்களும்ஒரே நேரத்தில் தனித்தனியாக சுழலும். நீளமான குழல் போன்ற வாய் மூலம் இரைகளை தண்ணீருடன் உறிஞ்சி பிடிக்கும். வாயில்பற்கள் இல்லை. சிறிய வகை மீன்களை உணவாக உட்கொள்ளும்.பெண் மீன் ரோஸ் வண்ணத்தில் 250 முட்டை வரை இடும். அவை ஆண் மீனின் வால் பகுதியில் பாதுகாப்பாகசெல்லும். அங்கே முட்டைகள் கருவுறும். 9 வாரங்களுக்கு பின் குஞ்சுகள் வெளியே வர, ஆண் மீன் தன் வாலை அசைத்து உதவி செய்யும்.5 சதவிகிதம் மட்டுமே உயிர் பிழைக்கும். 28 வாரங்களில் பருவம் அடையும். கடலின் சமநிலைப்படைப்பில் இவ்வகை அரிய உயிரினங்களும் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X