பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு: லோயர்கேம்பில் மின்உற்பத்தி துவக்கம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கூடலுார்; பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது.

பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 115.25 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. பெரியாறில் 13.4, தேக்கடியில் 7.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 438 கன அடியாக இருந்தது.

தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக 125 கன அடியாக இருந்த நீர்திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1772 மில்லியன் கன அடியாகும்.மின் உற்பத்தி துவக்கம்பெரியாறு அணையில் பிப். 11 ல் இருந்து நீர்திறப்பு 125 கன அடியாக குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 5 மாதங்களுக்குப்பின் நேற்று காலையில் 300 கன அடியாக அதிகரிக்கப் பட்டதைத் தொடர்ந்து 3 வது ஜெனரேட்டரில் 22 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

இதனிடையே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல்போக நெல் சாகுபடி தண்ணீர் திறப்பது மேலும் தாமதமாகும் என்பதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X