பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் இணைப்பு: அரசுக்கு கருத்துரு சமர்ப்பிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

அவிநாசி:அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டத்தில், விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான கருத்துரு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கி, 32 பொதுப்பணித்துறை குளம், 42 ஊராட்சி ஒன்றிய குளம், 971 ஊராட்சிக்குட்பட்ட குட்டைகள் என,1,045 நீர் நிலைகளில் நீர் செறிவூட்டும் வகையில், அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தல் வருவதற்குள், சில இடங்களில், நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, திட்ட உருவாக்க பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அத்திக்கடவு - -அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின், பழைய வடிவமைப்பில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னுார் ஒன்றியத்தின் சில பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் இணைக்கப்பட்டிருந்தன. அதன்பின், திருத்தியமைக்கப்பட்ட திட்ட வடிவமைப்பில், அந்த குளம் குட்டைகள் விடுபட்டன.அவ்வாறு விடுபட்ட குளம் குட்டைகளை தான் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கையாக வைத்தனர்.அதன்படி, ஏற்கனவே இணைக்கப்பட்டு விடப்பட்ட, 500 குளம், குட்டைகளை, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியின் போது இணைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில், இணைக்கப்படும். மாறாக, புதிய குளம், குட்டைகளை இணைக்கும் திட்டமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X