பொது செய்தி

தமிழ்நாடு

மீன் பிடி தடைக்காலம் முடிந்தது படகுகளில் புறப்பட்ட மீனவர்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 மீன் பிடி தடைக்காலம் முடிந்தது  படகுகளில் புறப்பட்ட மீனவர்கள்

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபி கடலில் 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

ஜூன் 15ல் தொடங்கிய 45 நாட்கள் மீன் பிடி தடைகாலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். இவர்கள் ஒரு வாரம் முதல் 20 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்ப உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X