பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி சந்திர மவுலீஸ்வரருக்குசனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

விருத்தாசலம்விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங் குறிச்சி சாலை ஏகநாயகர் சுவாமி கோவில், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X