புதுடில்லி,: உத்தரகண்டில் உள்ள, இந்திய -- சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியான, லிப்புலே பாஸ் அருகே, சீன ராணுவம், படைகளை குவித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்தியா -- சீனா இடையே, சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில், 20 இந்திய வீரர்கள் பலியாயினர்.
இதையடுத்து, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்த பேச்சில், சமரசம் எட்டப்பட்டது. இரு நாட்டு ராணுவமும், தங்கள் படைகளை, எல்லையில் இருந்து, திரும்ப பெற்று வருகின்றன.இந்நிலையில், 'படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை, இன்னும் முழுமை பெறவில்லை' என, மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், நேற்று முன்தினம் தெரிவித்தார்
.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, லிபுலே பாஸ் அருகே, வடக்கு சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில், சீன ராணுவம், படைகளை குவித்து வருவதாக, மூத்த ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்தார்.அங்கு, சீன எல்லைப் பகுதியில், 1,000த்திற்கும் மேற்பட்ட, சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. 'எல்லையில், நம் படைகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சீன படைகள் போருக்கு தயாராகி வருவதற்கான அறிகுறி தெரிகிறது. எப்பேர்பட்ட நிலைமையை சமாளிக்கவும், நம் படைகள் தயாராக உள்ளன' என, மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE