மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகம் மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகம் மூடல்

Added : ஆக 01, 2020
Share
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேர்தல் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அங்குள்ள, 35 வயதுள்ள ஆண் அலுவலர் ஒருவருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததும், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்கள், வெளியேறிவிட்டனர். நேற்று, அதிகாலை, மாநகராட்சி பணியாளர் மூலம்,
 மாவட்ட தேர்தல் பிரிவு  அலுவலகம் மூடல்

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேர்தல் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அங்குள்ள, 35 வயதுள்ள ஆண் அலுவலர் ஒருவருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததும், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்கள், வெளியேறிவிட்டனர். நேற்று, அதிகாலை, மாநகராட்சி பணியாளர் மூலம், கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் தெளித்தும் சுத்தம் செய்யப்பட்டது.அலுவலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வெளியாகி, யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே, அலுவலகம் திறக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X