பொது செய்தி

தமிழ்நாடு

போலி அறிவிப்பால் ஏமாறும் வளரிளம் சிறார்: கள ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

அவிநாசி:'கல்வியுடன் கூடிய வேலை வழங்கப்படும்' என்ற போலி அறிவிப்புடன், பெரும்பாலான நிறுவனங்களில், வளரிளம் பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவது, அதிகாரிகள் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு உட்பட தொழில் நகரங்களில், 15 முதல், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் சிறார்கள், இடைத்தரகர்கள் உதவியுடன் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் போலி அறிவிப்பு மூலம் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என்ற தகவல் 'சைல்ட் லைன்' அலுவலர்களின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.அதன் அலுவலர்கள் கூறியதாவது:இடைத்தரகர்களால், பணிக்கு அமர்த்தப்படுவோரில், 15 முதல், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் சிறுவர், சிறுமியர் அதிகளவில் உள்ளனர். தொழிலாளர் சட்டப்படி, வளரிளம் சிறார்களுக்கு, தினமும், 6:00 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும். மூன்று மணி நேரத்துக்கு, ஒரு மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும்.'ஓவர்டைம்', இரவு பணி வழங்க கூடாது. கட்டாயம் வார விடுப்பு வழங்க வேண்டும் என, விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்களில், இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை என்பது கள ஆய்வில் தெளிவாகிறது.தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த, பெண் தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சொந்த ஊர் சென்று கல்வி பெற விரும்புகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இணைந்து, கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X