விருதுநகரில் ஒரே நாளில் 1084 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் ஒரே நாளில் 1084 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஆக 01, 2020
Share

மதுரை; விருதுநகரில் நேற்று ஒரேநாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 1084 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மதுரையில் நேற்று கொரோனாவில் இருந்து மீண்ட 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 8631 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று புதிதாக 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 98 பேர் மதுரை நகரை சேர்ந்தவர்கள். 68 பேர் புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். மொத்த பாதிப்பு 11,175 ஆக உயர்ந்தது. 2297 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 82, 73, 72, 65, 63 வயது முதியவர்கள், 55, 54, 53, 52, 28 வயது பெண்கள் என 10 பேர் இறந்தனர். மொத்த பலி 247 ஆக உயர்ந்தது.திண்டுக்கல் டிஸ்சார்ஜ் 44திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 2191 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 3 போலீசார், 26 பெண்கள், 6 சிறுவர்கள் உட்பட 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 2893 ஆக உயர்ந்துள்ளது.தேனி 288தேனியில் நேற்று கொரோனா குணமாகி 288 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 3085 பேர் குணமாகியுள்ளனர். நேற்று மாவட்டத்தில் 317 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதுதான் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். குறிப்பாக தேனி 64, ஆண்டிபட்டி 14, பெரியகுளம் 99, போடி 42, சின்னமனுார் 44, உத்தமபாளையம் 31, கண்டமனுார் 10, வருஷநாட்டில் 12 பேர் பாதிக்கப்பட்டனர். தேனி அல்லிநகரம் 63 வயது மூதாட்டி, முத்துத்தேவன்பட்டி 80 வயது முதியவர், ஆண்டிபட்டி பேரூராட்சி 50 வயது பெண் எழுத்தர் கொரோனாவுக்கு பலியாயினர். பலி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது. ராஜதானி அருகே தெப்பம்பட்டி 65 வயது முதியவருக்கு நேற்று தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இறந்தார்.ராமநாதபுரம் 86ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவில் இருந்து 86 பேர் மீண்டனர். கமுதி போலீஸ் ஸ்டேசன் 48 வயது இன்ஸ்பெக்டர், அவரது 33 வயது உட்பட 37 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.சிவகங்கை 15சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேர் குணமாகி வீடு திரும்பினர். நேற்று புதிதாக 36 பேருக்கு தொற்று உறுதியானது. தேவகோட்டை மாந்தோப்பு பகுதி 50 வயது பெண், முத்துப்பட்டி அருகே வீரவலசை 50 வயது பெண், நாட்டரசன்கோட்டை 35 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகினர்.விருதுநகர் 1084விருதுநகரில் நேற்று ஒரேநாளில் 1084 பேருக்கு கொரோனா தொற்று குணமானது. அருப்புக்கோட்டை பெண் டாக்டர், சாத்துாரில் இரு போலீசார், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 31 ஊழியர்கள், ஸ்ரீவில்லிபுத்துார் துணை தாசில்தார், 2 வி.ஏ.ஓ.,க்கள் உட்பட 253 பேருக்கு தொற்று உறுதியானது. 5 பேர் பலியாகினர்.திருநெல்வேலிதிருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று 644 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருநெல்வேலியில் நேற்று 181 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 5393 ஆக உள்ளது. 2281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3068 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று 6 பேர் பலியானதால் இறப்பு 44 ஆக உயர்ந்தது.தென்காசியில் நேற்று 178 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிப்பு 2210 ஆக அதிகரித்தது. நேற்று 4 பேர் பலியானதால் இறப்பு 23 ஆக அதிகரித்தது. தற்போது 1014 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1173 பேர் குணமாகியுள்ளனர்.துாத்துக்குடியில் நேற்று 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 7350 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2119 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5183 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று துாத்துக்குடி கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் தர்மராஜன் பலியானர். மொத்த பலி 48 ஆனது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X