தமிழ்நாடு

புதிய முயற்சி! திருப்பூரில் புதுமையான மெய்நிகர் கண்காட்சி

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020
Share
Advertisement
புதிய முயற்சி! திருப்பூரில் புதுமையான மெய்நிகர் கண்காட்சி

திருப்பூர்:அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் உதவியுடன், கொரோனா தடுப்பு பொருட்களை காட்சிப்படுத்தும், புதுமையான மெய்நிகர் கண்காட்சி, திருப்பூரில் நடக்கிறது.திருப்பூர் பின்னலாடை துறையினர், அதிநவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து, பயன்படுத்தும் வகையில், ஹைடெக் இன்டர்நேஷனல் நிறுவனம், 'நிட்டெக்' என்கிற பெயரில், இயந்திர கண்காட்சியை நடத்தி வருகிறது.
கொரோனாவால், கண்காட்சி நடத்த முடியாத நிலையில், புதுமையான முயற்சியாக, அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் மூலம், கோவிட் ஷீல்டு - 2020 என்கிற பெயரில், மெய்நிகர் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.வரும் செப்., 14 முதல் 23ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட்-டீ கல்லுாரி, அடல் இன்குபேஷன் மையங்கள் கைகோர்த்துள்ளன.திருப்பூர், கோவை, பெங்களூரு, மும்பை, டில்லி உட்பட நாடுமுழுவதும் உள்ள நிறுவனங்கள், கொரோனா தடுப்புக்கான முக கவசங்கள், முழு கவச ஆடை, சானிடைசர், தெர்மல் ஸ்கேனர், கையுறை, காலுறை உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் காட்சிப்படுத்த உள்ளன.
புதிய மெய்நிகர் கண்காட்சி தொழில்நுட்ப துவக்க விழா, முதலிபாளையம் சிட்கோ வளாகத்தில் உள்ள அடல் இன்குபேஷன் வளாகத்தில், நாளை மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.இது குறித்து, 'ஹைடெக் இன்டர்நேஷனல்' நிர்வாக இயக்குனர் ராயப்பன் கூறியதாவது:அதிநவீன மென்பொருள் உதவியுடன், கண்காட்சி அரங்குகள், பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம், 96 அரங்குகளுடன் நடைபெறும் இந்த கண்காட்சியை, வர்த்தகர்கள், இணைய தளம் மூலம், இருப்பிடத்திலிருந்தே, காணலாம்.அரங்கில் உள்ள பொருட்களை பார்வையிடுவது, விசிட்டிங் கார்டு பரிமாற்றம், காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரசுரங்கள் பெறுவது, தேவைப்பட்டால் அரங்கத்தினருடன் வீடியோ காலிங் வசதியுடன் முகம்பார்த்து பேசும்வசதி என, நேரடியாக கண்காட்சியில் பங்கேற்பது போன்ற அனுபவத்தை பெறமுடியும்.
கொரோனா வைரசை வெற்றி கொள்ளும் வகையிலும், தடுப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு, வர்த்தக வாய்ப்புகளை பெற்று தருவதற்காகவும், இக்கட்டான சூழலிலும், கண்காட்சிகள் நடத்துவது சாத்தியம் என்பதை இந்த தொழில்நுட்பம் மெய்ப்பிக்கிறது. எதிர்கால தலைமுறையினருக்கு, மெய்நிகர் கண்காட்சி சிறந்த முன்னோடியாக அமையும். http:www.mavenvirtuals.com/live என்கிற இணையதள முகவரி மூலம், கண்காட்சியை பார்வையிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X