பொது செய்தி

தமிழ்நாடு

பணி பாதுகாப்பு சிக்கலால் 'ரியல் எஸ்டேட்' முடக்கம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; தனியார் துறை பணி பாதுகாப்பு, கேள்விக்குறியாகி உள்ளதால், பெரு நகரங்களில், புதிய வீடு வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றனர். இதை சீரமைப்பதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு துவங்கிய பின், மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில், ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம் வெகுவாக சரிந்துள்ளது.இதனால், இத்துறை வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக, பன்னாட்டு ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வு நிறுவனமான, ஜே.எல்.எல்., இந்தியா, தேசிய அளவில் கள ஆய்வு நடத்தியது. அதுபற்றி, அந்நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக, தொழில், சேவைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், பெரும்பாலான நிறுவனங்களில், ஊதியம் கிடைப்பதிலும், பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த காரணத்தால், வீடு வாங்க தயாராக இருந்தவர்கள் எல்லாம், தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள், விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கினாலும், நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், வீடு வாங்க தயங்குகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இப்பிரச்னையின் தாக்கம் குறித்த விபரங்கள், தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் வாயிலாக, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X