பக்ரீத் தொழுகையை வீடுகளில் நடத்திய முஸ்லிம்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பக்ரீத் தொழுகையை வீடுகளில் நடத்திய முஸ்லிம்கள்

Added : ஆக 02, 2020
Share

நெல்லிக்குப்பம் : பக்ரீத் பண்டிகையொட்டி நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. நேற்று முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. இது வரை நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்று கொத்வாபள்ளிவாசலில் தொழுகை நடத்துவர். நேற்று பள்ளிவாசலுக்கு செல்ல முடியாததால் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இது பற்றி முஸ்லிம்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு தொடர்வதால் வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகையை வீட்டிலேயே செய்தது வருத்தமாக உள்ளது. விரைவில் கொரோனா தொற்று பரவுவது தடுக்கப்பட்டு பள்ளி வாசல்கள் திறக்க வேண்டுமென அல்லாவிடம் பிரார்த்தனை செய்ததாக கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X