பி.சி.ஜி., தடுப்பு மருந்து கிங்க் மையம் தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.சி.ஜி., தடுப்பு மருந்து கிங்க் மையம் தயாரிப்பு

Added : ஆக 02, 2020
Share
சென்னை: சென்னை, கிண்டி கிங்க் ஆய்வு மையத்தில், காசநோய் தடுப்புக்கான, பி.சி.ஜி., மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.சென்னை, கிண்டியில் உள்ள கிங்க் ஆய்வு மையத்தில், பி.சி.ஜி., ஆய்வகம், 1948ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், ஆண்டுக்கு, 700 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. இதில், 50 சதவீதத்தை, இந்த ஆய்வகம் பூர்த்து செய்து வந்தது.கடந்த, 2008ல், ஆய்வக கட்டமைப்பு வசதிகள் போதிய

சென்னை: சென்னை, கிண்டி கிங்க் ஆய்வு மையத்தில், காசநோய் தடுப்புக்கான, பி.சி.ஜி., மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள கிங்க் ஆய்வு மையத்தில், பி.சி.ஜி., ஆய்வகம், 1948ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், ஆண்டுக்கு, 700 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. இதில், 50 சதவீதத்தை, இந்த ஆய்வகம் பூர்த்து செய்து வந்தது.கடந்த, 2008ல், ஆய்வக கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தற்போது, உரிய அனுமதி பெற்று மீண்டும், பி.சி.ஜி., தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: குழந்தைகளுக்கு காசநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால், குழந்தை பிறந்த உடன் முதலில், பி.சி.ஜி., தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டால், 14 ஆண்டுகள் காசநோய் வராமல் தடுக்கும். தற்போது, 11 ஆண்டுகளுக்கு பின், கிண்டியில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 1.70 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X